செவிசாய்க்கும் இறைவன்

sevisaaikkum iraivan

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

செவிசாய்க்கும் இறைவன் நம் அருகில் இருக்கின்றார் (2) துயரென்றால் போதுமே அதைத் தகர்த்திட வருவார் - சிறு துயரென்றால் போதுமே நம்மைத் தாங்கிட வருவார் செவிசாய்க்கும் இறைவன் இறைவன் 1. கூட்டினில் பதுங்கிடும் நத்தையைப் போல் துயர் கண்டு அச்சம் தேவையில்லை (2) அஞ்சாதே -2 எனத் தேற்றும் ஆண்டவர் துணையை நிதம் நினைத்தால் நெஞ்சினில் துணிவினை தினம் சுமந்து எதிர்வரும் சோதனை முறியடிப்போம் இறைவனின் அருட்கரம் தொடர்கின்ற வேளையில் நன்மைகள் வாழ்வில் பெருகிடுமே 2. விழிகளில் தேங்கிடும் நீர் கண்டால் அன்பினால் தாய் அதைத் துடைத்திடுவார் (2) தான்பெற்ற சேய்வாழ தனைமுழுதும் ஒளிதரும் மெழுகாய் உருக்கிடுவார் இலைகள் பலதிசை விரிந்தாலும் வேர்கள் அதனை மறப்பதில்லை தாயினும் மேலான இறையன்பு ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை
sevisaaikkum iraivan nam arugil irukkinraar (2) thuyarenraal podhumae adhaith thagarththida varuvaar - siru thuyarenraal podhumae nammaith thaangida varuvaar sevisaaikkum iraivan iraivan 1. koottinil padhungidum naththaiyaip pol thuyar kandu achcham thaevaiyillai (2) anjaadhae -2 enath thaetrum aandavar thunaiyai nidham ninaiththaal nenjinil thunivinai thinam sumandhu edhirvarum sodhanai muriyadippom iraivanin arutkaram thodargindra vaelaiyil nanmaigal vaazhvil perugidumae 2. vizhigalil thaengidum neer kandaal anbinaal thaai adhaith thudaiththiduvaar (2) thaanbetra saeivaazha thanaimuzhudhum olidharum mezhugaai urukkiduvaar ilaigal paladhisai virindhaalum vaergal adhanai marappadhillai thaayinum maelaana iraiyanbu orubodhum nammaik kaividuvadhillai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.