சூரியன் சாய காரிருள் மெல்ல
சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை
பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும்
பண்புயர் கீதம் வாழ்க மரியே
1. மாய உலகினில் சிக்கி உழன்று
வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை
தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து
சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே
2. சுந்தர வாழ்க்கைத் தோற்றம் மறைய
துன்ப அலைகள் கோஷித்தெழும்ப
அந்திய காலை எம்மருள் குன்றும்
ஆதர வீயும் வாழ்க மரியே
3. பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்
பாலகர் நின்று வீடு திரும்ப
அட்சய கோபு ரங்கள் இசைக்கும்
ஆனந்த கீதம் வாழ்க மரியே
sooriyan saaya kaarirul mella
soozhndhida yaavum sorndhidum vaelai
paarulagengum ninrezhundhongum
panbuyar keedham vaazhga mariye
1. maaya ulaginil sikki uzhandru
vaadiyae ullam sorndhidum vaelai
thaayagam kaatti kanneer thudaiththu
sanjalam theerkkum vaazhga mariye
2. sundhara vaazhkkaith thotram maraiya
thunba alaigal koshiththezhumba
andhiya kaalai emmarul kundrum
aadhara veeyum vaazhga mariye
3. patchigal osai maaindhida aadum
paalagar nindru veedu thirumba
atchaya kobu rangal isaikkum
aanandha keedham vaazhga mariye
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.