சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம்

siluvaiyil yesuvai inaiththadhellaam

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சிலுவையில் இயேசுவை இணைத்ததெல்லாம் - அவர் அன்பே தவிர ஆணியில்லை சாவை வென்றவர் உயிர்த்ததுவும் - அன்பின் சக்தியைத் தவிர ஏதுமில்லை சக மனிதனை அன்பு செய்தால் - இங்கே சகலமும் சரியாகும் தோழா தோழா என் அன்புத் தோழா 1. தரணியில் இயேசுவாய் பிறந்ததெல்லாம் - நம்மைத் தாங்கும் இறைவனின் அன்பேதான் இறப்பிலும் கூட இறைமகனும் - நமக்கு உரைத்தது அன்பின் மகத்துவம்தான் அன்பே இறைவன் என்றறிந்தால் - நம் அகமே ஆலயம் எனத் தெளிவோம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து - அங்கே ஒன்றாய் தினமும் வழிபடுவோம் 2. மனதிற்குத் தேவை உடன் வாழும் - பிற மனிதரின் அன்பே எனப் புரிந்தால் என் தேவை என் ஆசை என்றெண்ணியே - இங்கு எந்நாளும் அலையாத மனம் வாய்த்திடும் அன்பே இறைவன் என்றறிந்தால் - நம் அகமே ஆலயம் எனத் தெளிவோம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து - அங்கே ஒன்றாய் தினமும் வழிபடுவோம்
siluvaiyil yesuvai inaiththadhellaam - avar anbe thavira aaniyillai saavai vendravar uyirththadhuvum - anbin sakthiyaith thavira yedhumillai saga manidhanai anbu seidhaal - ingae sagalamum seriyaagum thozhaa thozhaa en anbuth thozhaa 1. tharaniyil yesuvaai pirandhadhellaam - nammaith thaangum iraivanin anbedhaan irappilum kooda iraimaganum - namakku uraiththadhu anbin magaththuvamdhaan anbe iraivan endrarindhaal - nam agamae aalayam enath thelivom oruvarai oruvar anbu seidhu - angae onraai thinamum vazhipaduvom 2. manadhirkuth thaevai udan vaazhum - pira manidharin anbe enap purindhaal en thaevai en aasai enrenniyae - ingu ennaalum alaiyaadha manam vaaiththidum anbe iraivan endrarindhaal - nam agamae aalayam enath thelivom oruvarai oruvar anbu seidhu - angae onraai thinamum vazhipaduvom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.